கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்


கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர தி.மு.க. செயலாளர் எஸ்.கே.நவாப் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன், மதியழகன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கியதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வி.ஜி.ராஜேந்திரன், விவசாய அணி மாநில துணை செயலாளர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் பாலாஜி, மத்தீன், மீனா நடராஜன், புவனேசுவரி, சீனிவாசன், செந்தில்குமார், தேன்மொழி மாதேஷ், பிரிதோஸ்கான், சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு உறுப்பினர் குமரேசன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் குமரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சந்திரன், ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பர்கூர்

பர்கூரில் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்துக்கு மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கியதுடன் தென்னங்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. சுகவனம், மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் பர்கூர் பேரூர் நகர செயலாளர், பாலன் பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார், துணைத் தலைவர் லட்சுமி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் சூரியகலா வெங்கடப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story