கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்


கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
x

தர்மபுரி மாவட்டம் முழுவதும் தி.மு.க. கொடியேற்றியும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

தர்மபுரி

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் முழுவதும் தி.மு.க. கொடியேற்றியும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

கருணாநிதி பிறந்த நாள்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டம் முழுவதும் தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அந்தந்த பகுதிகளில் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த விழாக்களில் கட்சி நிர்வாகிகள் தி.மு.க. கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு சார்பு அமைப்புகள் சார்பில் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பள்ளி உள்ளிட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தடங்கம் சுப்பிரமணி

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தர்மபுரி 4 ரோட்டில் உள்ள அண்ணா சிலை முன்பு நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கி கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர் முன்னிலை வகித்தார். நகர பொறுப்பாளர் அன்பழகன் வரவேற்றார். விழாவையொட்டி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதேபோன்று தர்மபுரி நகர தி.மு.க. சார்பில் 33 வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முல்லைவேந்தன், சுருளிராஜன், கனகராஜ், காசிநாதன், அன்பழகன், ராஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் ரவி, குமார், ராஜா, ரஹீம், நகராட்சி கவுன்சிலர்கள் புவனேஸ்வரன், பாண்டியன், முருகவேல், ஜெகன், வாசுதேவன், சவுந்தரராஜன், மோகன், பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தர்மபுரி பஸ்நிலையத்தில் தி.மு.க. வர்த்தகர் அணி சார்பில் 1000 பேருக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி பிரியாணி வழங்கினார்.

மேற்கு மாவட்ட தி.மு.க.

தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பென்னாகரத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் பி.என்.பி. இன்பசேகரன் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் செல்வராஜ், பேரூராட்சி தலைவர் வீரமணி, துணைத்தலைவர் வள்ளியம்மாள் பவுனேசன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் காளியப்பன், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஏரியூரில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. கொடியை ஏற்றி ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் காலை உணவு வழங்கினார். இதேபோன்று பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.லர் கலந்து கொண்டனர்.


Next Story