கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி


கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x

ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பாக முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். சாலை ஆய்வாளர் இந்துமதி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி கலந்து கொண்டார்.

மேலும் இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், துரை மாமது, வக்கீல் எம்.சுந்தர், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, அரையாளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனி மற்றும் சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story