கதிர் காமேஸ்வரி அம்மன் கோவிலில்குத்துவிளக்கு பூஜை


கதிர் காமேஸ்வரி அம்மன் கோவிலில்குத்துவிளக்கு பூஜை
x

கதிர் காமேஸ்வரி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருவரங்குளம் அருகே திருமலைராய சமுத்திரத்தில் கதிர் காமேஸ்வரர் சமேத கதிர் காமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி பூஜையை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருமலைராய சமுத்திரம் ஊர் இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story