கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் திருவிழா


கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் திருவிழா
x

கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் நன்செய்புகழூர் ஊராட்சி தவுட்டுப்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன், மகாமாரியம்மன், கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 25-ந் தேதி இரவு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தாரை தப்பட்டைகள் முழங்க தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பூச்சூட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 26-ந் தேதி காலை கட்டிப்பாளையம் கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து பூசாரி வேல் எடுத்து கொண்டு வீதி உலா வந்தார். இரவு தவுட்டுப்பாளையம் பகவதி அம்மன், மாரியம்மன் மின் விளக்கு அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. நேற்று காலை கருப்பண்ணசாமி கோவிலில் கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மாலை பகவதி அம்மன் கோவிலில் பொங்கல், மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) காலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story