காவனூர் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா
காவனூர் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடந்தது
வேலூர்
கே.வி.குப்பம்
காவனூர் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடந்தது
கே.வி.குப்பம் தாலுகா காவனூர் கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழா நடந்தது. முன்னதாக திரளான பக்தர்கள் மத்தியில் காவி நாச்சியம்மன் வீதி உலா நடந்தது. விழாவையொட்டி கெங்கையம்மன் சிரசு தாரை தப்பட்டை, சிலம்பாட்டங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு கெங்கையம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தி கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அம்மனுக்கு கூழ் வார்த்தல், கும்பசோறு படைத்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அம்மன் தரிசனம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல், இரவு வாண வேடிக்கை, இன்னிசை கச்சேரி, குறவஞ்சி நாடகம் ஆகியவை நடந்தன.
Related Tags :
Next Story