கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபர் கைது


கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 July 2023 2:45 AM IST (Updated: 30 July 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

நாடுகாணி சோதனைச்சாவடியில் கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

கூடலூர்

நாடுகாணி சோதனைச்சாவடியில் கஞ்சா கடத்தி வந்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வாகன சோதனை

கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதை பயன்படுத்தி சிலர் லாரிகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துகின்றனர். இதை தடுக்க கூடலூர் பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூரில் இருந்து மலப்புரத்துக்கு செல்லும் சாலையில் நாடுகாணி சோதனைச்சாவடியில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜ், போலீசார் பழனிசாமி, வினிஷ் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கேரள வாலிபர்

அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த பையை பிரித்து பார்த்தபோது, 2 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து, கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து லாரி மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த சுனிஷ் (வயது 34) என்பவரை கைது செய்தனர். அவர், தேவாலா போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.


Related Tags :
Next Story