ரெயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது
ரெயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சூரமங்கலம்:
சேலம் வழியாக செல்லும் ெரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ெரயில்வே போலீசார் ெரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் ரெயில்வே போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே நேற்று காலை இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையில் போலீஸ்காரர்கள் முத்துவேல், தமிழ்செல்வன், ஸ்ரீநாத் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பாட்னா - எர்ணாகுளம் ெரயிலில் (வண்டி எண் 22644) டேனீஷ்பேட்டை முதல் கருப்பூர் ெரயில் நிலையம் இடையே சோதனை நடத்தியபோது எஸ் -10 பெட்டியில் கருப்பு நிற பை ஒன்று சந்தேகப்படும்படியாக இருந்தது, இதையடுத்து போலீசார் அந்த பையை திறந்து பார்த்த போது, அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது. மேலும் போலீசார் நடத்திய, விசாரணையில் கஞ்சாவை கடத்தி வந்தது கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த பிரமோத் (வயது 22) என்பது தெரியவந்தது, இதனையடுத்து ெரயில்வே போலீசார் அவரை கைது செய்ததுடன் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.