புதிய கட்டிடம், நவீன வசதிகளுடன் தஞ்சையில் ரூ.7 கோடியில் 35 அங்கன்வாடி மையங்கள் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தகவல்

புதிய கட்டிடம், நவீன வசதிகளுடன்  தஞ்சையில் ரூ.7 கோடியில் 35 அங்கன்வாடி மையங்கள்  மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தகவல்
x

தஞ்சை மாநகராட்சியில் ரூ.7 கோடியில் 35 அங்கன்வாடி மையங்கள் புதிய கட்டிடம் மற்றும் நவீன வசதிகளுடன் செயல்பட உள்ளது என்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சை மாநகராட்சியில் ரூ.7 கோடியில் 35 அங்கன்வாடி மையங்கள் புதிய கட்டிடம் மற்றும் நவீன வசதிகளுடன் செயல்பட உள்ளது என்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

அங்கன்வாடி மையம்

தஞ்சை மேலவீதியில் உள்ள 18-வது வார்டில் மூலை அனுமார் கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு கழிவறை, ஸ்மார்ட் டி.வி. மற்றும், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பபட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கவுன்சிலர் சசிகலாஅமர்நாத் வரவேற்றார். மண்டல தலைவர் மேத்தா, மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரூ.7 கோடியில் 35 மையங்கள்

புதிய அங்கன்வாடி மையத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி செலவில் 35 அங்கன்வாடி மையங்கள் சீரமைக்கப்படுகின்றன. இதில் புதிய கட்டிடம் மற்றும் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையான உபகரணங்கள், ஸ்மார்ட் டி.வி. உள்ளிட்டவையும் வாங்கப்பட்டுள்ளன. பணிகள் முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில மாதங்களில் அனைத்து அங்கன்வாடி மையங்களும் சீரமைக்கப்பட்டு திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story