அதவத்தூரில் கிடா வெட்டு திருவிழா


அதவத்தூரில் கிடா வெட்டு திருவிழா
x

அதவத்தூரில் கிடா வெட்டு திருவிழா நடைபெற்றது.

திருச்சி

சோமரசம்பேட்டை அருகே அதவத்தூரில் எழுந்தருளியுள்ள பனையடி கருப்பு சுவாமி, ஏகிரி அம்மன், பிடாரி அம்மன், சாம்புவன் கோவில் திருவிழா காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வயலூர் முருகன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஏகிரி அம்மன், பனையடி கருப்பு சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அதவத்தூர் ஏகிரி அம்மன் கோவிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பக்தர்களுக்கு காப்பு கட்டும் வைபவமும், சாம்புவன் காப்பு கட்டி கடிங்காய் அடித்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி பனையடி கருப்பு குதிரை வாகனத்திலும், ஏகிரி அம்மன் தினமும் அன்னம், சிம்மம், காளை, பூதம், யானை வாகனத்தில் வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கிடாவெட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான ஆடுகள் வெட்டப்பட்டன. 8-ந் தேதி காலை கருவய்யனார் பூரண புஷ்கலா தேவியர் மற்றும் பனையடி கருப்பு கோயில் பட்டவன் பூஜை நடக்கிறது. 5 கரை பட்டையதாரர்கள் கூடி பெரிய பட்டையதாரர் குதிரை ஏறி கிராம மக்கள் ஆட்டு தலைக்குத்தி படுகளம் சென்று மேலப்பேட்டையில் எல்லை பூஜை நடக்கிறது. 9-ந்் தேதி அதவத்தூர் சாவடி மைதானத்திலிருந்து அம்மன் பூந்தேரில் புறப்பட்டு மஞ்சள் நீராடி அதவத்தூர் வீதி வலம் வந்து சுவாமி கோவில் குடிபுகுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஐந்து கரை பட்டையதாரர்கள் மற்றும் அதவத்தூர் கிராம பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.


Next Story