காரில் கடத்திய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது


காரில் கடத்திய  ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்:  2 பேர் கைது
x

உப்புக்கோட்டையில் காரில் கடத்திய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனி

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் உப்பார்பட்டி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து விசாரணை நடத்தினர். அதில் டிரைவர் மற்றும் காரில் இருந்தவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர். அப்போது காரில் சாக்கு மூட்டைகள் இருந்தன.

அதனை பிரித்து பார்த்தபோது சுமார் ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 350 மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் போடி மேல சொக்கநாதபுரத்தை சேர்ந்த காளிராஜ் (வயது 29), உப்பார்பட்டி பொன் நகரை சேர்ந்த முத்து காமாட்சி (32) என்பதும், விற்பனை செய்வதற்காக மொத்தமாக வாங்கி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள், கார், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story