திருமணமான 2 வாரத்தில் புதுப்பெண் கடத்தல்


திருமணமான 2 வாரத்தில் புதுப்பெண் கடத்தல்
x

விருத்தாசலத்தில் திருமணமான 2 வாரத்தில் புதுப்பெண்ணை கடத்திய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

விருத்தாசலம்,

திருமணம்

விருத்தாசலம் பெரியகண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் தேவராஜ் மனைவி விஜயராணி (வயது 40). இவரது மகள் அன்புக்கரசிக்கும் (21), அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவருக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

சம்பவத்தன்று இரவு அன்புக்கரசி தனது தாய் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் விஜயராணி எழுந்து பார்த்த போது, அன்புக்கரசியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயராணி மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அன்புக்கரசி கிடைக்கவில்லை.

கடத்தல்

இது குறித்து விஜயராணி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் திருமணமான எனது மகளை சின்னபண்டாரங் குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அவரது தந்தை சுந்தரம், செந்தமிழ்செல்வன், வீரமணி ஆகியோருடன் சேர்ந்து கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில் வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களையும், கடத்தப்பட்ட புதுப்பெண்ணையும் தேடி வருகின்றனர். திருமணமான 2 வாரத்தில் புதுப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story