பள்ளி மாணவி கடத்தல்
விழுப்புரம் அருகே பள்ளி மாணவி கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே பூசாரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற சதீசையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story