பள்ளி மாணவி கடத்தல்


பள்ளி மாணவி கடத்தல்
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:46 PM GMT)

பள்ளி மாணவியை கடத்தியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தலிங்கமடம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி, அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தற்போது 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை கிருஷ்ணகிரியை சேர்ந்த முருகன் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற முருகனையும் தேடி வருகின்றனர்.


Next Story