கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்தது- கிலோ ரூ.29-க்கு ஏலம்


கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்தது- கிலோ ரூ.29-க்கு ஏலம்
x

கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்தது

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தக்காளி சீசன் தொடங்கி உள்ளது. இதனால் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது.

ஆனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி(மொத்த விலை) ரூ.47-க்கு விற்பனையானது. மேலும் கிணத்துக்கடவு பகுதிகளில் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.65 என இருந்தது. விலை அதிகமாக இருந்ததால், இல்லத்தரசிகள் கவலை அடைந்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் 2 வாரத்திற்கு பிறகு மீண்டும் தக்காளி விலை வேகமாக குறைய தொடங்கி இருக்கிறது. அதன்படி கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.29-க்கு விற்பனையானது. இது கடந்த 2 வாரத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.18 குறைவு ஆகும். மேலும் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கடைகளில் சில்லறை விலை ரூ.35 முதல் ரூ.40 வரை உள்ளது. விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story