தமிழ்நாடு கிரிக்கெட் லீக் போட்டி: கிங்ஸ்டன் வேலூர் அணி வெற்றி
தமிழ்நாடு கிரிக்கெட் லீக் போட்டியில் கிங்ஸ்டன் வேலூர் அணி வெற்றி பெற்றது.
சேலம்
தமிழ்நாடு கிரிக்கெட் லீக் தொடர் சேலம் உடையாப்பட்டியில் உள்ள எஸ்.ஆர்.பி. மைதானத்தில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கிய கிரிக்கெட் போட்டி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 2 முறை மோத வேண்டும். நேற்று முன்தினம் மழை காரணமாக 8-வது லீக் ஆட்டத்தில் ஜெகத் வாரியர்ஸ்-கிங்ஸ்டன் வேலூர் அணிகள் மோதும் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று மதியம் அந்த 2 அணிகளும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ்டன் வேலூர் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. அணியில் சிறப்பாக விளையாடிய வீரர் சந்தோஷ் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். அதன்பிறகு களமிறங்கிய ஜெகத் வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 70 ரன்கள் மட்டுேம எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ்டன் வேலூர் அணி வெற்றி பெற்றது. வேலூர் அணி வீரர் ஸ்ரீராம் சிறப்பாக 3 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட் எடுத்தார். அடுத்த ஆட்டம் வருகிற 7-ந் தேதி நடைபெறும்.