ரூ.15 லட்சத்தில் சமையலறை கட்டிடம்
ரூ.15 லட்சத்தில் சமையலறை கட்டிடத்தை நல்லதம்பி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட சு.பள்ளிப்பட்டு ஊராட்சி கீழ்குரும்பர் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சு.பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கே.எஸ்.ஏ.மோகன்ராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி.பூபதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியைகள் சுமதி, புவனேஸ்வரி ஆகியோர் வரவேற்றனர்.
புதிய சமையலறை கட்டிடத்தை திருப்பத்தூர் தொகுதி ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு, ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், மாவட்ட கவுன்சிலர் கே.எஸ்.ஏ.குணசேகரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.தசரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் நன்றி கூறினார்.