கே.எம்.ஜி. கல்லூரியில் முப்பெரும் விழா


கே.எம்.ஜி. கல்லூரியில் முப்பெரும் விழா
x

கே.எம்.ஜி. கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

வேலூர்

குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரியில் ஆசிரியர் தின விழா, பல்கலைக் கழகத் தேர்வில் 13 தரவரிசைகளில் மாணவர்கள் தேர்ச்சி பெற சாதனை புரிந்த பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா, இன்னர் வீல் சங்கம் சார்பில் ஆசிரியர்தின விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. துணை முதல்வர் மு.மேகராஜன் வரவேற்றார். முதல்வர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், பொருளாளர் கே.எம்.ஜி.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வியியல் கல்லூரி இயக்குனர் நடராஜன், முதல்வர் ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் துறை தலைவர் ஜெயக்குமார் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள் சரளா, ராமபிரியா, கருணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பேராசிரியர்கள் பாலமுருகன், ரேணு, ராஜீவ் ஆகியோர் பேசினர். தமிழ் துறை பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். பேராசிரியர் சங்கீதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இன்னர்வீல் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு

முன்னாள் நகர மன்ற தலைவர்கள் திலகவதி ராஜேந்திரன், அமுதா சிவப்பிரகாசம், தலைவர் கீதாலட்சுமி, செயலாளர் பிரியா குப்புசாமி, உலக தன்னார்வல ஒருங்கிணைப்பாளர் ஆயிஷா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகேஷ்குமார் சிரிப்பு யோகா பயிற்சி அளித்தார். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர். பேராசிரியர் ராதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ் துறை பேராசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.


Next Story