திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் இரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பனியன் கடைகள் எரிந்து நாசமானது. சேதமதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் இரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பனியன் கடைகள் எரிந்து நாசமானது. சேதமதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
திருப்பூர்
திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் இரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பனியன் கடைகள் எரிந்து நாசமானது. சேதமதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றியவிவரம் வருமாறு:-
பனியன் பஜார்
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே காதர்பேட்டை பகுதி பனியன் விற்பனை கடைகள் அதிகம் உள்ள பகுதியாகும். இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பனியன் விற்பனை கடைகள் உள்ளன. இதில்நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் பள்ளிக்கு முன்புறம் தனியாருக்கு சொந்தமான காலியிடத்தில் பனியன் பஜார் என்ற பெயரில் ஒரே இடத்தில் வரிசையாக 50 பனியன் விற்பனை கடைகள் இருந்தன. இரும்பு தகடுகளால் வேயப்பட்ட தற்காலிக கடைகள் ஆகும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான உள்நாட்டு பனியன் ஆடைகள், உள்ளாடைகள் என அனைத்து ஆடை ரகங்களும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த கடைகள் தினமும் காலை முதல் இரவு 9.30 மணி வரை செயல்படுவது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல் பனியன் கடைகளில் வியாபாரம் முடித்து 9.30 மணி அளவில் கடைகள் அனைத்தையும் பூட்டிவிட்டு வியாபாரிகள் வீடுகளுக்கு புறப்பட்டனர். பனியன் பஜாரில் 2 காவலாளிகள் மட்டும் பணியை மேற்கொண்டு இருந்தனர்.
50 கடைகள் எரிந்து நாசம்
இந்தநிலையில் சிறிது நேரத்தில் பனியன் பஜாருக்குள் உள்ள பனியன் கடையில் தீப்பற்றியது. இதைப்பார்த்த காவலாளிகள் சத்தம் போட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கடைகளிலும் பனியன் ஆடைகள் அதிகளவில் இருந்ததால் தீ மளமளவென பரவியது. திருப்பூர் வடக்கு, மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 10 நிமிடத்துக்குள் 50 கடைகளுக்கும் தீ பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
அந்த வளாகத்தில் இருந்த ஜெனரேட்டரிலும் தீப்பற்றியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அந்த ஜெனரேட்டரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினார்கள். சுமார் ½ மணி நேரத்துக்குள் அந்த வளாகத்தில் 50 கடைகளும் தீக்கிரையாகி போனது. 2 மணி நேரம் போராடி தீயை மேலும் பரவவிடாமல் அணைத் தனர். தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாகராயபுரம் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.
கண் எரிச்சல், மயக்கம்
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். தீ விபத்து குறித்த தகவல் பரவியதும் அங்கு கடை வைத்திருந்த கடைக்காரர்கள் பதறியடித்து ஓடி வந்தனர். தங்கள் கண் முன்னே கடையில் உள்ள ஆடைகள் தீப்பற்றி எரிவதை கண்டு கதறிதுடித்தனர். பெண் வியாபாரிகள் தலையில் அடித்து அழுதது பரிதாபமாக இருந்தது.
தீ விபத்து காரணமாக கரும்புகை அந்த பகுதியில் சூழ்ந்தது. சுற்றியுள்ள கடைக்காரர்கள், வீடுகளில் இருந்தவர்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டது. 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் அங்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
பல கோடி ரூபாய் ஆடைகள் கருகின
ஒவ்வொரு கடையிலும் சுமார் ரூ. பல லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் இருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகள் சேதமாகியிருக்கலாம் என்றுகூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.மின்கசிவு காரணமா இல்லை வேறு எதுவும் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.