கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு: 257 பேரிடம் விசாரணை...!


கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு: 257 பேரிடம் விசாரணை...!
x

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் 257 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக நீலகிரி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி,

கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

இது தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது மறுவிசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிப்படை போலீசார் இதுவரை 220-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாக கொடநாடு வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இதுவரை 257 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட கோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வழக்கு தொடர்பாக வெளி மாநிலத்திற்கு சென்று தனிப்படை போலீசார் விசாரிக்க வேண்டியுள்ளதால் கால அவகாசம் தேவை என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை வரும் ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story