கொடிக்கால்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்


கொடிக்கால்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்
x

கொடிக்கால்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்

திருவாரூர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான ஆக்கி போட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் அரசு, தனியார், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு ஆக்கி போட்டி நடந்தது. 14 வயது மாணவிகள் பிரிவில் கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2-ம் இடத்தினையும் பெற்றது. 17 வயது பிரிவில் கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், பேரளம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும் பெற்றது. 19 வயது பிரிவில் திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், பேரளம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 2-ம் இடமும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.


Next Story