கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 3 கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்


கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 3 கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்
x

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 3 கிராமங்கள் வெள்ளநீர் சூழ்ந்து காட்சியளிக்கின்றன.

கடலூர்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து உபரிநீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை அடைந்து அங்கிருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்படுகிறது.

இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 3 கிராமங்கள் வெள்ளநீர் சூழ்ந்து காட்சியளிக்கின்றன. கடலூர் திட்டுக்காட்டூர், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், கீழகுண்டலபாடி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 2 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொள்ளிடம் கரையில் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story