கொள்ளிடம் ஆற்றில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு; 200-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த தண்ணீர்


கொள்ளிடம் ஆற்றில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு; 200-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த தண்ணீர்
x

கிராமங்களுக்கு இடையிலான சாலைகள் வெள்ள நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடலூர்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் பழைய கொள்ளிடம் ஆறு நடுப்பகுதியில் உள்ள அக்கரை, ஜெயங்கொண்டபட்டினம், திட்டுக்காட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

கிராமங்களுக்கு இடையிலான சாலைகள் வெள்ள நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story