கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம்


கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம்
x

சிதம்பரத்தில் கூத்தாடும் பிள்ளையார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது,

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவ விழா கடந்த 21-ந் தேதி மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் கூத்தாடும் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவு வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலா நிகழ்ச்சி நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் விநாகர் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதன்பிறகு அங்கு கூடியிருந்த பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர். தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சதுர்த்தி நாளான இன்று காலை மகா கணபதி ஹோமமும், மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story