வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்


வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
x

வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விருதுநகர்

வத்திராயிருப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அருப்புக்கோட்டை செம்பட்டி பகுதி விவசாயிகள், தூத்துக்குடி-மதுரை அகல ெரயில்பாதை திட்டத்தில் செம்பட்டி பகுதி விவசாய நிலங்கள் வழியாக ெரயில் பாதை செல்வதற்கு நடவடிக்கை எடுக்கும் நிலையில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் இதனை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தென்னை சாகுபடி இல்லாத சாத்தூரில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வத்திராயிருப்பு பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய சங்க தலைவர் விஜய முருகன் வலியுறுத்தினார்.

நிதி உதவி

சாத்தூர் பகுதியில் உரத்தட்டுப்பாடு இருப்பதாக விவசாயி மனோஜ் குமார் புகார் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்தில் சர்க்கரை ஆலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திர ராஜா வலியுறுத்தினார்.

வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பட்டதாரிகளான மணிமாறன், ஸ்ரீநாத் பிரகதீஷ் குமார் ஆகிய2 பேருக்கும் அக்ரி கிளினிக் அமைக்க தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

எட்டூர் வட்டத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற விவசாயி சிறுதானியங்களை மதிப்பு கூட்டி தயாரித்த தின்பண்டங்களை அறிமுகப்படுத்தி அவருக்கு உதவி செய்த வேளாண் மற்றும் வணிக துறை அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடன் அட்டை

பிரதமரின் விவசாயிகள் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகலுடன் விண்ணப்பித்து பெயர்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் விவசாயிகள் வேளாண் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளை தொடர்பு கொண்டு தங்களுக்கான கடன் அட்டையை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார், வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன், கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ராஜலட்சுமி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story