அய்யனார் கோவில் திருப்பணிகளை விரைவில் முடிக்க பக்தர்கள் கோரிக்கை


அய்யனார் கோவில் திருப்பணிகளை விரைவில் முடிக்க பக்தர்கள் கோரிக்கை
x

அய்யனார் கோவில் திருப்பணிகளை விரைவில் முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் காஞ்சரம் பேட்டையில் பிரசித்தி பெற்ற மாமொண்டி அய்யனார் சாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 2009-ம் ஆண்டு திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டது. இதற்காக அரசு, தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை சார்பில் ரூ. 17 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தது.

இதை தொடர்ந்து ரூ 10 லட்சம் வரை முதல் தவணையாக நிதி வரப் பெற்றது. அதன் மூலம் திருப்பணி வேலைகள் நடந்தது.ஆனால் இந்தப் பணிகள் பாதியிலேயே நின்றது. மேலும் கடந்த 13 ஆண்டுகள் தடைபட்ட இந்த பணிகள் மீண்டும் பூர்த்தியாக, அரசு பிடித்தம் செய்து வைத்துள்ள ரூ. 7 லட்சத்து 10 ஆயிரத்தை உடனடியாக வழங்கி மீண்டும் திருப்பணிகள் தொடங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போதுள்ள விலை ஏற்றத்தின் காரணமாக மொத்தம் ரூ. 10 லட்சமாவது திருப்பணிக்கு தேவைப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட கோவில் பொறுப்பாளர்கள், அறநிலைய துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் அரசு இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை. இது குறித்து இந்தபகுதியை சேர்ந்த கிராம மக்கள் அரசு விரைவில் குறிப்பிட்ட நிதி ஆதாரங்களை ஒதுக்கீடு செய்து திருப்பணியை நிறைவுசெய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக கோவிலின்அறநிலைய துறை உதவி ஆணையர் விஜயன் கூறியதாவது, காஞ்சரம் பேட்டை மாமொண்டி அய்யனார் சாமி கோவில் திருப்பணிகள் முழுமையாக பூர்த்தியடைய, உரிய நிதியை பெற அனைத்து முன்ேனற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story