கோவில் திருவிழா சமாதான கூட்டம்


கோவில் திருவிழா சமாதான கூட்டம்
x

கோவில் திருவிழா தொடர்பாக சமாதான கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி அருகே உள்ளது பாகனூர் கிராமம். இந்த கிராமத்தில் தற்போது மழை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த திருவிழாவையொட்டி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கரகம் எடுத்து வராமல் ஒதுக்கி வைத்து திருவிழா நடத்த உள்ளதாக தாசில்தார் செந்தில்வேல் முருகனிடம் புகார் செய்யப்பட்டு உள்ளது.அதனை தொடர்ந்து திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் இரு தரப்பினரிடையே சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் அனைத்து சமுதாய மக்களையும் சேர்த்து கோவில் திருவிழா நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதில் மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன், வருவாய் ஆய்வாளர் ஷகிலா பேபி, கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் மற்றும் இரு தரப்பை சேர்ந்த முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.


Next Story