கருமாரியம்மன் கோவில் வருடாபிஷேகம்
கருமாரியம்மன் கோவில் வருடாபிஷேகம் நடந்தது.
ராமநாதபுரம் தாயுமானவர் சாமி கோவில் தெருவில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலின் முதலாம் ஆண்டு வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப் பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர் பூஜையுடன் தொடங்கி 108 அஷபோத்ர கலச பூஜை நடைபெற்றது. மனோகர குருக்கள், ரமேஷ்குருக்கள் ஆகியோர் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் கலசங்கள் மங்கல வாத்தி யங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. விழாவில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் கலசங்களில் உள்ள புனித நீரை கொண்டு அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. விழாவையொட்டி கோவில் நிர்வாகி முருகேசன் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம் கலந்துகொண்டு அன்ன தானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.