ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் ஒரே நாளில் நடந்த பல திருமணங்கள்
கொரோனா குறைந்து வருவதன் எதிரொலி யாக முகூர்த்த நாளான நேற்று ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் ஒரே நாளில் நடந்த பல திருமணங்கள் நடந்தன.
கொரோனா குறைந்து வருவதன் எதிரொலி யாக முகூர்த்த நாளான நேற்று ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் ஒரே நாளில் நடந்த பல திருமணங்கள் நடந்தன.
கட்டுப்பாடு
தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளிலும் கூட்டம்கூட கூடாது என்றும் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா குறைந்து வருவதன் எதிரொலி மற்றும் ஆவணி மாதத்தின் முகூர்த்த நாளான நேற்று ராமநாத புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வழி விடு முருகன் கோவிலில் திருமணம் செய்ய ஏராளமான மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கோவிலில் குவிந்திருந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக திருமண நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததால் திருமண நிகழ்ச்சிகள், உறவினர்கள் கூட்டம் இல்லாமல் எளிமையாக நடைபெற்று வந்தது.
மகிழ்ச்சி
ஆனால் தற்போது கொரோனா குறைந்து வருவதால் நேற்று வழிவிடு முருகன் கோவிலில் நடந்த ஏராளமான திரு மணத்தில் உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
இதனால் வழிவிடு முருகன் கோவில் பகுதி ஏராளமான பொதுமக்கள் கூட்டத்துடன் நேற்று திருவிழாபோல் களைகட்டி காணப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் திருமண நிகழ்ச்சிகள் உறவினர்கள் கூட்டத்துடன் சிறப்பாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.