கோபி அருகே வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


கோபி அருகே வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

கோபி அருகே வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள பெரிய மொடச்சூர் வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ந் தேதி முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று முன்தினம் 2-ம் கால பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால யாக பூஜை நடத்தப்பட்டு, அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணி அளவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோபி பெரிய மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில், வடுகபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story