கொடுமுடி வடக்கு தெரு புது மாரியம்மன் கோவில் பொங்கல் விழா; பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

கொடுமுடி வடக்கு தெரு புது மாரியம்மன் கோவில் பொங்கல் விழா; பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
x

கொடுமுடி வடக்கு தெரு புது மாரியம்மன் கோவில் பொங்கல் விழா; பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

ஈரோடு

கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற வடக்குத்தெரு புது மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து காவிரி ஆற்றில் இருந்து கம்பம் மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு கோவில் நடப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) குண்டம் விழாவும், 8-ந் தேதி பொங்கல் விழாவும், 9-ந் தேதி கம்பம் பிடுங்கப்பட்டு காவிரி ஆற்றுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சியும், 10-ந் தேதி சிம்ம வாகனத்தில் முத்து பல்லக்கில் அம்மன் எழுந்தருளி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story