அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு


அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஈரோடு

அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கோபி

கோபி வடக்கு வீதியில் அமைந்துள்ள பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவிலில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

மேலும் முத்துமாரி அம்மனுக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு இருந்தது. ஆபரணங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். இதையொட்டி அப்பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர்.

அந்தியூர்

இதேபோல் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சந்தன காப்பு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் அந்தியூர், அத்தாணி, வெள்ளித்திருப்பூர், ஆப்பக்கூடல், பர்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பண்ணாரி மாரியம்மன்

பண்ணாரி மாரியம்மன், சென்னிமலை முருகன், கொடுமுடி மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள், பவானி சங்கமேஸ்வரர் கோவில்களிலும் அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அனைத்து கோவில்களிலும் பக்தர்களை அதிக அளவில் காணமுடிந்தது.


Next Story