முருகம்பாளையம் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


முருகம்பாளையம் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

முருகம்பாளையம் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட முருகம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர், பகவதி அம்மன், மலையாள கருப்பண்ண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் புனரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை விநாயகர் வழிபாட்டுடன் தொடர்ந்தது. இதையடுத்து மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்று சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமி கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதைத்தொடர்ந்து கொடுமுடி காவிரிக்கு பக்தர்கள் சென்று புனித தீா்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் மாலையில் முளைப்பாரி அழைக்கும் நிகழ்ச்சியுடன் முதல் கால பூஜைகள் நிறைவு பெற்றன. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை 4 மணிக்கு யாக சாலையில் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து விநாயகர், பகவதி அம்மன் கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விநாயகர், பகவதி அம்மன், மலையாள கருப்பண்ண சாமிக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா கமிட்டியினரும், ஊர் பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story