சத்தியமங்கலம் அருகே வேட்டைக்காரன் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்


சத்தியமங்கலம் அருகே வேட்டைக்காரன் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்
x

சத்தியமங்கலம் அருகே வேட்டைக்காரன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே வேட்டைக்காரன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

வேட்ைடக்காரன் கோவில்

சத்தியமங்கலம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையத்தில் பழமையான வேட்டைக்காரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 2-ந் தேதி விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது. அன்று மாலை கங்கை அழைத்தல், தீர்த்த குடம் எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து யாக பூஜைகள் நடந்தன.

கும்பாபிஷேகம்

நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் 2-ம் கால யாக பூஜை நடந்தது. காலை 8.30 மணியளவில் யாக குண்டத்தில் இருந்து புனித நீரை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று, கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார்கள். அப்போது கோவிைல சுற்றி இருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

சத்தியமங்கலம், கோபி, ஈரோடு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story