செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
திருப்பூர்


திருப்பூர் அருகே செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில்

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செல்வவிநாயகர் கோவில்

திருப்பூரில் இருந்த பல்லடம் செல்லும் சாலையில் உப்பிலிபாளையம் தண்ணீர்பந்தல் பகுதியில் வேண்டுவோருக்கு வேண்டிய வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ேகாவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 7.35 மணிக்கு மேல் 9 மணிக்குள் யாத்ரா தானம் சங்கல்பம், அதனை தொடர்ந்து திருக்குடங்கள், யாகசாலையில் இருந்து கோபுர கலசங்கள் மூலாலய பரிவார மூர்த்திகளுக்கும் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா என்னும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் தலைமை அர்ச்சகர் முத்துசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமை தாங்கி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

அதனை தொடர்ந்து தசதான தச தரிசனம் பிறகு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு செல்வ விநாயகர் மற்றும் மகா மாரியம்மன் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். கோவில் கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டலபூஜை இன்று ( திங்கட்கிழமை) முதல் 12 நாட்களுக்கு மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தண்ணீர் பந்தல் நடராஜன் தலைமையிலான விழா கமிட்டியினர் செய்திருந்தார்கள்.

கலந்து கொண்டவர்கள்

கும்பாபிஷேகத்தில் பல்லடம் சட்ட மன்ற தொகுதி எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி விஜயகுமார் எம்.எல்.ஏ., பல்லடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கரைப்புதூர் நடராஜன், பரமசிவம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர் பந்தல் நடராஜன், சரண் கார்மெண்ட்ஸ் பாலசுப்பிரமணியம், ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன், ஸ்ரீ மகாலட்சுமி பேக்கரி கண்ணன், ஸ்ரீ பாலாஜி ஆட்டோ ஸ்டோர்ஸ் துரைசாமி, கண்ணன் மெடிக்கல் கிருஷ்ணன், ஜெய்சக்தி ஸ்டீல்ஸ் சதீஷ், ஜெயம் மெடிக்கல் ராஜேஸ்வரன், பல்லடம் ஒன்றிய கவுன்சிலர் ரவி, கே. எஸ்.டி.டெக்ஸ்டைல்ஸ் தமிழ்செல்வன், வடக்கு மாவட்ட ம.தி.மு.க. மாணவர் அணி பாலகிருஷ்ணன், குருபிரியா டெக்ஸ்டைல்ஸ் விஸ்வநாதன், கரைப்புதூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தன், பல்லடம் பிரண்ட்ஸ் எலக்ட்ரானிக்ஸ் முத்துக்குமார், டி. எஸ்.பி.ஏஜென்சீஸ் நந்தகுமார், மற்றும் விசுவநாதன், தமிழ்ச்செல்வன், ஆனந்தன், லோகநாதன், சுப்பிரமணியம், பாலகிருஷ்ணன், அர்விந்த், ரமேஷ், இளங்கோ, அழகேசன், கன்னியப்பன் என்கிற மணி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story