அறங்காவலர் தலைவராக அருண் பழனிசாமி பொறுப்பேற்றார்


அறங்காவலர் தலைவராக அருண் பழனிசாமி பொறுப்பேற்றார்
x
திருப்பூர்


ஊத்துக்குளி தாலுகா குன்னத்தூர் செம்மாண்டம்பாளையத்தில் ஸ்ரீவிநாயகர் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள இந்த கோவிலில் அறங்காவலர் தலைவராக அருண் பழனிசாமி நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் கடந்த 12-ந்தேதி காலை கோவில் அறங்காவலர் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் ஆதிரை, ஆதியூர் பத்ரகாளியம்மன் கோவில் தக்கார் பரணிதரன், குன்னத்தூர் கோவில் அலுவலர் பாஸ்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அறங்காவலர் தலைவர் அருண் பழனிசாமி குடும்பத்தின் சார்பில் வெள்ளிரவெளி காலனியை சேர்ந்த உடல்நலம் குன்றிய ஒரு குழந்தைக்கு மருத்துவ உதவிக்காக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது


Next Story