கோவில்பட்டி வல்லப விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா
கோவில்பட்டி வல்லப விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி சண்முக சிகாமணி நகர் வல்லப விநாயகர் கோவிலில் 11-வது ஆண்டு வருசாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வேதா அனுக்ஞை, மகா சங்கல்பம், விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், கும்பபூஜை, மூல மந்திர ஜபம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், அஸ்திர ஹோமம், மகா பூர்ணாஹூதி தீபாரதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு விமானம் மூலஸ்தானம் பரிவார மூர்த்திக்கு கும்பாபிஷேகம் சிறப்பு தீபாராதனை வல்லப விநாயகருக்கு அலங்காரத் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. இரவு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story