கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்


கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்
x

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று குமரி மாவட்டத்தில் பல இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது.

கன்னியாகுமரி

தக்கலை,

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று குமரி மாவட்டத்தில் பல இடங்களில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்

பத்மநாபபுரம் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி நேற்று மாலை கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. இதில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஏராளமான சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டனர்.

கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலமானது பல்வேறு தெரு வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தை பத்மநாபபுரம் நகர ஆர்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளர் ஜோதீந்திரன் மற்றும் பலர் வழிநடத்தினர். இன்று (சனிக்கிழமை) மாலை திருவிளக்கு பூஜை, புஷ்பாபிஷேகம், இரவில் உறியடி நிகழ்ச்சியும் நடக்கிறது.

சந்தனகுட பவனி

பரப்பற்று ஜனார்த்தன கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் கணபதி ஹோமம், அகண்டநாம ஜெபம், அன்னதானம், தீபாராதனை, லட்சார்ச்சனை, சுழலும் சொல்லரங்கம், பகவத்கீதை பாராயணம், சமய வகுப்பு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 4-ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு சுமங்கலி பூஜை, மாலை 5.30 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு சீர்வரிசையுடன் யானை மீது சந்தனகுட பவனி நடந்தது.

இந்த பவனியானது பரப்பற்று சந்திப்பு, கூட்டுமங்கலம், புதூர் வழியாக மண்டைக்காடு கோவிலை சென்றடைந்தது. இரவு சமய மாநாடு, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. 5-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பண்பாட்டு போட்டிகள், மாலை 4 மணிக்கு உறியடி, 5 மணிக்கு சுதர்சன ஹோமம், 6.45 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 10.30 மணிக்கு நெய்யப்பம் சுடுதல், நள்ளிரவு 12 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

விசுவ இந்து பரிஷத்

குளச்சல் நகர் விசுவ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஊர்வலம் நடந்தது. விழாவில் குளச்சல் செக்காலர் தெரு முத்தாரம்மன் கோவில் சந்திப்பில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை விசுவ இந்து பரிஷத் தென் மாநில இணை செயலாளர் காளியப்பன் தொடங்கி வைத்தார். நகர தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் நடராஜன், துணைத்தலைவர்கள் சேகர், சி.பரதன், துணை செயலாளர்கள் முருகன், சதீஷ், பஜிரங்தள் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் ஆலடி அதிசய நாகர் ஆலயம், காமராஜர் பஸ் நிலையம், காந்தி சந்திப்பு வழியாக களிமார் மகா விஷ்ணு கோவிலை சென்றடைந்தது. அங்கு மாவட்ட தலைவர் குமரேசதாஸ் ஊர்வலத்தை முடித்து வைத்து பேசினார். தொடர்ந்து மகா விஷ்ணு கோவில் நிர்வாக குழு தலைவர் ஜெகநாதன் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில், கோட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் கார்த்திக், பொருளாளர் ரதீஷ், இணை செயலாளர் ராஜேஷ்குமார், கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


Next Story