முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு
சங்கராபுரம் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியசாமி கோவிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிவசுப்ரமணியருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் தேவபாண்டலம் குந்தவேல் முருகன், குளத்தூர் சரவணபுரம் ஆறுமுகபெருமான், சங்கராபுரம் சன்னதி தெரு பாலசுப்பிரமணியர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story