மயிலாடுதுறை ராஜகோபாலசாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு
யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர், கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபாலசாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
செங்கமலவள்ளி தாயார், ராஜகோபாலசாமி ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகிய சாமிகள், மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலைச் சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர், கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story