ஆரணி பகுதி பெருமாள் கோவில்களில் கூடாரவல்லி விழா


ஆரணி பகுதி பெருமாள் கோவில்களில் கூடாரவல்லி விழா
x

ஆரணி பகுதி பெருமாள் கோவில்களில் கூடாரவல்லி விழா நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி பகுதி பெருமாள் கோவில்களில் கூடாரவல்லி விழா நடந்தது.

ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் 27-ந் தேதி கூடாரவல்லி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று கூடாரவல்லி விழா நடந்தது.

இதனையொட்டி அதிகாலையிலேயே ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி மகா அலங்காரம் செய்யப்பட்டது. திருப்பாவை நோன்பு இருக்கும் பெண்கள் பஜனை கோஷ்டியினர் பக்தி, பாடல்கள் பாடி பரவசம் அடைந்தனர். திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டன. இதே போல் தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில், கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலு தாயார் சீனிவாச பெருமாள் கோவில், எஸ்.எம்.ரோட்டில் உள்ள கோதண்ட ராமர் கோவில், இரும்பேடு ஏ.சி.எஸ்.நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலகளில் உள்ள ஆண்டாள்சன்னதியில் கூடபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story