குடியாத்தம் ராபின்சன் பூங்காவை சீர் செய்யும் பணி


குடியாத்தம் ராபின்சன் பூங்காவை சீர் செய்யும் பணி
x

குடியாத்தம் ராபின்சன் பூங்காவை சீர் செய்யும் பணியை நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் ராபின்சன் பூங்காவை சீர் செய்யும் பணியை நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தார்.

குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் ராபின்சன் குளம் உள்ளது. இந்த குளத்தைச் சுற்றி பூங்கா அமைக்கப்பட்டு நடைபாதையில் பல இடங்களில் பூஞ்செடிகள், அழகு செடிகள், மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி காலையிலும் மாலையிலும் ராபின்சன் பூங்காவில் உள்ள நடைபாதையில் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி செய்கின்றனர்.

இந்த பூங்கா குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான மழை நீர் சேகரிப்பு மையமாகவும் விளங்குகிறது, ராபின்சன் குளத்தில் நீர் நிரம்பியதால் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவர பராமரிப்பு இல்லாததால் பூங்காவின் சுற்றுப் பகுதியில் அதிக அளவு புதர் மண்டியும், செடி கொடிகள் வளர்ந்தும் காணப்பட்டன.

இதனைத்தொடர்ந்து ராபின்சன் குளம் பகுதியில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொண்டு குளத்தை சுற்றியுள்ள சுவர்களில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றி செப்பனிடும் பணிகள் நடைபெற்றது.

50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இதில் ஈடுபட்டனர்.

இந்த பணிகளை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ஏ. திருநாவுக்கரசு, குடியாத்தம் ரோட்டரி ராபின்சன் பூங்கா பராமரிப்பு குழு தலைவர் என்.எஸ்.குமரகுரு, செயலாளர் டி.ராஜேந்திரன், ரோட்டரி நிர்வாகி ரங்காவாசுதேவன், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.Next Story