மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் கே.வி.சித்ரா 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், எஸ்.பூமிகா 486 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மகிமா 481 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பெற்றனர். அதேபோல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் ஜெ.நவீனா 575 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், எஸ்.எம்.கார்த்திகேயாஸ்ரீ 543 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், ஜே.பிரணவ் 535 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளர் பேங்க். சுப்பிரமண்யன் கலந்து கொண்டு அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். இதில் பள்ளி முதல்வர் ஜெயசித்ரா, ஒருங்கிணைப்பாளர் தர்மலிங்கம் மற்றும் 12-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.