பாகன் தம்பதிக்கு பாராட்டு


பாகன் தம்பதிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் பாகன் தம்பதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஆ.ராசா எம்.பி., சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வந்தனர். அங்கு பொம்மி, ரகு என்ற குட்டி யானைகளை பராமரித்த பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டினர். மேலும் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. அப்போது வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story