கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
போதை தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
வள்ளியூர்:
நெல்லையில் மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட, சாலை பாதுகாப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி-2022 நடந்தது. இதில் வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு செயல்முறை, சாலை பாதுகாப்பு மாதிரி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களும் கண்காட்சியில் மாணவிகள் இடம் பெற செய்திருந்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியின் கண்காட்சி இரண்டாம் பரிசை வென்றது.
மாவட்ட அளவிலான மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவி ரோஷ்மி ஜோஸ் முதல் இடத்தையும், ஓவியப்போட்டியில் முதலாம் ஆண்டு மாணவி நர்மதா தேவி மூன்றாம் இடத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிசுகள் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி தாளாளர் லாரன்ஸ், தலைவர் ஹெலன் லாரன்ஸ், முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம் மற்றும் பலர் பாராட்டினர்.