டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு


டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:45 PM GMT)

பல்கலைக்கழக தேர்வில் சாதனை டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்திலியில் உள்ள டாக்டர்.ஆர்.கே.எஸ்.கல்வியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கல்லூரி அளவிலும் முதலிடம் பிடித்தனர். டாக்டர்.ஆர்.கே.எஸ். கல்வியியல் கல்லூரி மாணவர்கள் கடந்த 2018-2020-ம் கல்வி ஆண்டில் படித்த மாணவி ஆர்த்தி பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தை பிடித்து 10 பதக்கங்கள் மற்றும் 3 ரொக்கப்பரிசும், மாணவர் கண்ணன் வரலாற்று பாடத்தில் தங்கப்பதக்கம் பெற்றனர். 2019-2021-ம் கல்வி ஆண்டில் மாணவிகள் பாரதி முதல் இடத்தை பிடித்து 11 பதக்கங்கள் மற்றும் 3 ரொக்கப்பரிசு, பர்கத்துனிஷா 2-வது இடத்தை பிடித்து ரொக்கப்பரிசு, கமலி கோர் பேப்பரிலும், கற்பகம் தமிழிலும், ஷினிமோல் வரலாற்றிலும் முதல் இடத்தை பிடித்தனர். இதேபோல் 2020-2022-ம் கல்வி ஆண்டில் மாணவிகள் ஆசியாபானு முதல் தரவரிசை 11 பதக்கங்கள் மற்றும் 4 ரொக்கப்பரிசு, ஷர்மிளா 3-வது இடம் பிடித்தனர். மாணவிகள் சுப்புலட்சுமி தமிழிலும், வித்யா கணிதம் மற்றும் கோர் பேப்பரிலும், ஜனனி கோர் பேப்பரிலும் முதல் இடம் பிடித்து பல்கலைக்கழக அளவில் சாதனை படைத்துள்ளதாக கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தெரிவித்தார். சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா இந்திலி டாக்டர்.ஆர்.கே.எஸ். கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு டாக்டர்.ஆர்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர்.குமார், பொருளாளர் மணிவண்ணன், செயலாளர் கோவிந்தராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைக்கல்லூரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக அளவில் சாதனை புரிந்த மாணவர்கள் மற்றும் வெற்றிக்கு உழைத்த கல்லூரி முதல்வர் ஜெயசீலன் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் உதவி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story