குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: துளசி மாலைகள் விற்பனை அமோகம்


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: துளசி மாலைகள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:46 PM GMT)

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: துளசி மாலைகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற அக்.18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர். தசரா திருவிழாவில் கடுமையான விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், வேண்டுதல்களுக்கு ஏற்ப 61, 41, 21, 11 நாட்கள் என அவரவர் சூழலுக்கு தகுந்தாற்போல் விரதம் மேற்கொள்வர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் புனித நீராடி கடற்கரை பகுதியில் விற்பனை செய்யப்படும் துளசி மாலைகளை வாங்கி கடலில் கழுவி சாமியின் பாதத்தில் வைத்து கழுத்தில் அணிந்து கொண்டு வருகின்றனர். இவர்களுக்காக கடற்கரையில் ஏராளமான துளசிமாலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் சிகப்பு நிற ஆடை அணிந்து தினமும் நெல்லை மாவட்டம் வள்ளியூர், பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் துளசி மாலைகளை வாங்கி, அணிந்து வருகின்றனர்.


Next Story