குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார பணிகளை தீவிரப்படுத்த இந்து முன்னணி கோரிக்கை


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார பணிகளை தீவிரப்படுத்த இந்து முன்னணி கோரிக்கை
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:47 PM GMT)

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு சுகாதார பணிகளை தீவிரப்படுத்த இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி

உடன்குடி:

இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சமூக நல அமைப்புகள் சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகள், கோவில் வளாகத்தின் பல இடங்களில் குப்பைகள், கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு தீ வைத்து ஏரிக்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு சுகாதார சீர்கேடுகள், மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. மேலும் ஏராளமான பக்தர்கள் கோவில் கலையரங்கம் உள்ளிட்ட இடங்களில் இரவில் தங்கி உள்ளனர். இங்கு கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால், பக்தர்கள், சிறுவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, அரசு சுகாதாரத் துறையினர் இப்பகுதியில் முன்னதாகவே அடிக்கடி சுகாதார பணிகளை செய்துவரவேண்டும், குப்பைகளை அகற்றி கொசு பரவும் இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Next Story