குமரி: ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு...!


குமரி: ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு...!
x

குமரியில் விசைப்படகு மூலம் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

குளச்சல்,

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே முட்டம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின்(55). விசைப்படகில் மீன்பிடித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 9-ம் தேதி வழக்கம்போல் புரூஸ் என்பவரின் விசைப்படகில் மீன்பிடிக்க முட்டம் மீன் பிடித்துறைமுகத்திலிருந்து ஜஸ்டின் மற்றும் 25 தொழிலாளர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் இவர்களது படகு 42 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் தொழில் செய்து கொண்டிருக்கும்போது ஜஸ்டின் மயங்கி விசைப்படகுக்குள்ளேயே விழுந்தார்.

உடனே தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு படகை அவசரமாக கரை திருப்பினர். ஆனால் கரை சேருவதற்குள் ஜஸ்டின் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story