நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை


நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை
x

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் மூலவர் வேணுவனேஸ்வரர் சன்னதி அருகே சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நெல்லை கோவிந்தரின் மூலவருக்கு இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி நேற்று மாலையில் விநாயகர் அனுக்ஞையுடன் கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து சங்கல்ப பிரார்த்தனையும், சிறப்பு யாகசாலை பூஜையும் நடந்தது. இன்று காலை 10.40 மணியில் இருந்து 12 மணிக்குள் நெல்லை கோவிந்தருக்கு கும்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்க உள்ளது.


Next Story